2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண உபதபாலகங்கள் விரைவில் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

வடமாகாணத்தில் யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படாத உபதபாலகங்களை விரைவில் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.ரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

யாழ்.பிரதம தபால் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வடக்கில் உப தபாலகங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆனையிறவு, கிளாலி, மாவிட்டபுரம், தனங்கிளப்பு, கீரிமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள உபதபாலகங்கள் முதலில் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

வடபகுதியில் மக்கள் மீளக்குடியமராத பகுதிகளிலும் உயர்பாதுகாப்பு வலயங்களிலும் உள்ள 5 உப தபாலகங்கள புனரமைக்க முடியாது உள்ளன.

மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் உபதபாலகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 204 உபதபாலகங்கள் செயற்பாடு நிலையில் உள்ளன.

14 தபாலகங்கள் இயங்க முடியதா நிலையில் உள்ளன. அவற்றை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழுக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டால் வடமாகாணத்திற்கான தபால்களை 12 மணித்தியாலயத்திற்குள் உரியவர்களுக்கு ஒப்படைக்க முடியும்

வெளிநாட்டு பொதித்தபால் அனுப்பிவைக்கும் சேவையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 11.8 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X