2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ் மக்கள் தமிழ் மொழியில் பொலிஸ் முறைப்பாடுகளை செய்ய முடியும்: சிகேரா

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் தழிழில் முறைப்பாடுகளை செய்யமுடியும் என்பதுடன் குற்றப்பத்திரிகையும் தமிழ் மொழியில் நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் இனங்காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுதலையான குற்றவாளிகளே தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கு காரணம் சட்டத்தில் காணப்படும் தளர்வுகளைப் பயன்படுத்தி பிணையில் சென்று தொடர்ந்தும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம்.

போதைப்பொருட்களின் பாவனையும் விற்பனையும் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X