2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தந்தை செல்வாவின் நினைவு தின கூட்டத்தில் செல்லையா இராஜதுரை உரையற்றுவதற்கு சிவாஜிலிங்கம் எதிர்ப்பு

Super User   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்; எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

"முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்" என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

"தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்" என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X