2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யுத்த காலத்தின் போது குறிப்பாக 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அறிந்துக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.

இந்த விடையம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

2006ஆம், 2007ஆம், 2008ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அந்தக் காலப் பகுதிகளில், காணாமற் போனவர்களது உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
இதில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எம்மிடம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இவர்களின் உறவினர்களை அழைத்து இரண்டாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்.
 
2006 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போதுதான் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றோம். முறைப்பாடுகளில் காணப்படுகின்ற ஆவணக் குறைபாடுகளைச் சீர்செய்வதுடன், பொலிஸ் முறைப்பாடு தொடர்பிலும் ஆவணங்களைப் பெற்று வருகின்றோம்.
 
இந்த விசாரணைகள் ஒரு வார காலத்துக்கு எமது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. இதன் பின்னர் கொழும்பிலிருந்து எமது தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X