2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடலுக்குள் பாய்ந்தது லொறி; இருவர் படுகாயம்

Super User   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                         (கவிசுகி)

யாழ். பண்ணைப் பாலத்திலிருந்து லொறி கடலுக்குள் பாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. வேகமானச் சென்ற  லொறி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடலுக்குள் பாய்ந்துள்ளது.

லொறியின் சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X