2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி அமைதியான சூழலில் மக்களை வாழவைக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                              (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இங்குள்ள மக்களை அமைதியான சூழலில் வாழவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்,  தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டி.எஸ்.தியாகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவினருக்கும் தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கும் இடையிலான சந்திப்பொன்று வட்டுக்கோட்டையிலுள்ள பேராயரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே தென்னிந்திய திருச்சபையின் பேராயர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்களின் அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாத நிலைமையும் இங்கு காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

அமைதி வழியை விரும்பும் யாழ்ப்பாண மக்கள்; உரிமையுடன் ஜனநாயக வழியில் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனையே யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்க்;கின்றனரென தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டி.எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X