2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2012 மே 03 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணத்தில் ஊடக சுகந்திர தினம் இன்று வியாழக்கிழமை யாழ். ஊடகவியலாளர்களினால் உணர்வுபூர்வமாக அனுஷ்ரிக்கப்பட்டது. மறைந்த நிமலராஜன் ஞாபகந்த அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். திருமறைக்கலா மன்றத்தில் இடம்பெற்றது.

இதில் மறைந்த ஊடகவியலாளனும் கேலிச்சித்திர வரைஞரான பயஸின் காலக்கிறுக்கல்கள் என்றும் நூலும் வெளியீடு செய்யப்பட்டது.

சமகால தமிழ் ஊடகங்கள் என்ற தலைப்பில் வீரகேசரி வார இதழின் பிரதம ஆசிரியர் என்.தேவராஜ், நாலாவது தூண் என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணி குருபரன், சமூக ஊடகங்கள் என்ற கருத்தியலில் அருட் தந்தை றுபன் மரியாம்பின்ளை ஆகியோர் உரை நிகழ்த்தினார்

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அப்பத்துரை விநாயகமூர்த்தி, எஸ்.சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கேசிவாஜிலிங்கம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X