2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் தங்கநகைகள் அணிவதை தவிர்க்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் போலியான நபர்களினால் ஏமாற்றப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனால்  வைத்தியசாலைக்கு வரும் வெளிநோயாளர்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வரவேண்டாமெனவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் வயோதிபர்களை தனியாக  வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க வேண்டாமெனவும் அப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X