2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளன

Menaka Mookandi   / 2012 மே 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் முறையிடுமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக தங்கள் நிலையத்திற்கு வருகை தந்து நேரடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக எங்களிடம் முறையிடுவதன் மூலம் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு இலவசமாக சட்டத்தரணிகள் மூலம் வழக்கு தாக்கல் செய்து அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக பெண்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய விதமாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட மகளிர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X