2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'இந்தியாவிலிருந்து வந்தோரால் யாழ். குடாநாட்டில் மலேரியா பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பு'

Super User   / 2012 மே 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


இந்தியாவிலிருந்து வந்தோரால் யாழ்.குடாநாட்டில் மலேரியா பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து இருப்பதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகளினால் யாழில் மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதை புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணி,  இந்திய வீட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வந்தோர் மற்றும் வியாபார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய பிரஜைகளினால் யாழில் மலேரியா தீவிரமாக பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்கா நாடுகளில் தங்கியிருந்து விட்டு தாயகம் திரும்பியுள்ளவர்களுக்கு மலேரியாவின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவோர் கட்டயமாக இரத்த பரிசோதனை செய்யவேண்டும். யாழ். குடாநாட்டில் 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் நான்கு மாதங்களில் 5 பேருக்கு மூளை மலேரியாவும் 2 பேருக்கு சாதாரண மலேரியாவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த யுத்த கால நடவடிக்கைகளின் போது புலம்பெயந்து இந்தியாவில் குடியேறிய யாழ். மக்கள் தற்போது தாயகத்திற்கு திரும்பிக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு மலேரியா இரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்த பரிசோதனை செய்யவேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X