2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு

Super User   / 2012 மே 09 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சிறுவன் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த 11 வயதான எஸ்.செந்தூரன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவர். யுத்த நடவடிக்கையின் போது இச் சிறுவனின் மூன்று சகோதார்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X