2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தப்பியோடிய கைதிக்கு ஆறு மாத மேலதிக சிறை

A.P.Mathan   / 2012 மே 10 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பலாலி பண்ணையில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிக்கு இன்று வியாழக்கிழமை ஆறு மாத சிறைத்தண்டனையை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா வழங்கினார்.

குறித்த சிறைக்கைதி பலாலி பண்ணையில் இராணுவத்தினருக்கு முடி திருத்தும் பணிக்காக அமர்த்தப்பட்டு இருந்தார். இவர் சிறைச்சாலை காவலர் ஒருவருக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்தை கொடுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

தப்பிச் சென்ற கைதி யாழ். பஸ் நிலையத்திலிருந்து தென்பகுதி ஒன்றிற்கு தப்பில் செல்வதற்காக காத்திருந்தபோது கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த நபரின் வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இவருக்கு மேலதிக 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X