2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சாமி வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 15 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். இந்து கோவில்களில் சாமி வாகனத் திருட்டில் ஈடுபட்ட வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த திருட்டுக் கும்பலைச் சேந்த நால்வருடமிருந்தும் யாழ். கொக்குவில் பொற்பதி விநாயகர் கோவில் மற்றும் கொண்டலடி விநாயகர் கோவில்களில் திருடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான சாமி வாகனங்கள், பித்தளையிலான சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். மூலவைச் சந்தியில் உள்ள மரக்காலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து இவை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X