2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். வைத்தியசாலை பணிப்பாளரை பதவி நீக்கம் செய்யுமாறு கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜாவைஅப்பதவியிலிருந்து நிறுத்துமாறு கோரி யாழ். மருத்துவ சங்கம் இன்று திங்கட்கிழமை யாழ். வைத்தியர்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிக்கும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தே இந்த பதவிநீக்கத்தை வலியுறுத்துவதாக யாழ். மருத்துவ சங்கம் தெரிவித்தது.

எனவே அந்தப் பதவியில் அவர் இருப்பதற்கு தகுதியற்றவர். அதனால் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு வைத்தியர்களின் சம்மதத்துடன் கையெழுத்து பெறப்பட்டு வருகின்றதாக யாழ்.மருத்துவர் சங்கம் மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X