2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ்ப்பாணத்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், இளைய சமுகத்தவர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை  நாளுக்குநாள் அதிகரித்துவருகின்ற நிலையில், அதன் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய தேவையேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவ சமூகத்தை இப்புகைப் பழக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கு பாடசாலை மட்டங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இளையோரை புகைப்பிடித்தலிருந்து விடுவிப்பதற்கு அவர்களின் பெற்றோர் முன்னின்று செயற்பட வேண்டுமெனவும் ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X