2025 மே 19, திங்கட்கிழமை

இன்னும் ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி வரும் : இந்திய உயர்ஸ்தானிகர்

Kogilavani   / 2012 ஜூலை 20 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

இன்னும் ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி வரும். அதற்கான முழு மூச்சுடன் இந்திய அரசு செயற்பட்டு வருகின்றது என இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்தார்

யாழ்.பல்கலைக்கழக கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் 'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' என்னும் கருப்பொருளில் சர்வதேச மாநாடு ரில்கா சிற்ரி ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடகிழக்கில் இன்று ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் வாழ்வியல் முன்னேற்றமடைந்து வருவதை நாங்கள் உணர்கின்றோம்.

இலங்கையின் எதிர்கால ஒளிமயமான வாழ்வுக்காக  இந்தியா எப்போதும் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருக்கின்றது. வடக்கு மக்களின் முழுமையான அமைதியான வாழ்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசிற்கு உண்டு.

இடம்பெயர்ந்து முகாமில் வாழும் மக்களை மீளக்குடியேற்றி அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக இந்திய அரசு வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்துள்ளது.

வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பாரிய வளர்ச்சியடைவதோடு துரிதமடையும்' என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X