2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

செம்மணி இந்துமாயானம் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 22 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். செம்மணி இந்துமாயானம், பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் செம்மணி இந்துமாயான அபிவிருத்திச் சபையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதாக செம்மணி இந்துமாயான அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

மாயானத்தைச் சுற்றி சுற்றுமதிலுடன் நுழைவாயில் அமைக்கப்பட்டதுடன் சுற்றுமதிலுக்கு வர்ணமும் பூசப்பட்டுள்ளது.  செம்மணி இந்துமாயான புனரமைப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

செம்மணி இந்துமாயான அபிவிருத்திச் சபைத் தலைவர் லயன் இலட்சுமிகாந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  வலிகிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன், வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் அ.உதயகுமார் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X