2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வாகன கடனுதவி வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (ரஜனி)

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முச்சக்கர வாகன கடனுதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அனுசரணையில் முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர கடனுதவி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்.மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது அலைன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஆண், பெண் இருபாலருக்கும் புதிய முச்சக்கர வாகன கடனுதவி வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பதிவுகள் மேற்கொண்டவர்களுக்கு தெரிவின் அடிப்படையில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய முச்சக்கர வாகன கடனுதவி வழங்கப்படவுள்ளது.

கடன் பெற்றவர்கள் இரண்டாவது மாதத்திலிருந்து 45 மாதங்கள் குறைந்த கால அடிப்படையிலும் 72 மாதங்கள் கூடிய கால அடிப்படையிலும் தவணை கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கபடவுள்ளன.

இக்கடனுதவியில் சாரதி அனுமதிபத்திரம் உட்பட பதிவுகள் அனைத்தும் அலைன்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் உரியவரிடம் கையளிக்கப்படவுள்ளன.

முச்சக்கர வாகன கடனுதவியை பெறுவதற்கு  பதிவுகளை மேற்கொண்டவர்களின் விபரங்களையும் முச்சக்கர கடனுதவி வழங்கும் நிறுவனங்களின் ஆவணங்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே உரியவர்களிடம் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், சாரதி அனுதிப்பத்திரம் பெற்று தற்போது மாற்று திறனாளிகள் ஆனவர்கள், இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிபத்திரம் பெற்றுகொள்ள இருப்பவர்களுக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் முச்சக்கர வாகனத்தை செலுத்த முடியுமானால் அவர்களுக்கும் முச்சக்கர வாகன கடனுதவி வழங்கப்பட்டு சாரதி அனுமதிபத்திரம் வழங்கப்படும்.

இக்கடனுதவியினை முச்சக்கர வாகனத்தின் மூலம்; வரும் வருமானத்தின் ஊடாக செலுத்த முடியுமா என்பது தொடர்பாகவும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முச்சக்கர கடனுதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அலைன்ஸ் நிறுவன யாழ்.மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் புனர்வாழ்வ மீளாய்வு குழு பொறுப்பதிகாரி மேஜர் ஜகத்குமார, புனர்வாழ்வு நிறுவனத்தின் கொழும்பு உயர்மட்ட அதிகாரி ஆர்.செல்வராஜா, அலைன்ஸ் நிறுவனத்தின் யாழ்.மாவட்ட முகாமையாளர் எஸ்.நிஷாந் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X