2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரு பெண்கள் கைதாகி விடுதலை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். நல்லூர் ஆலயச் சூழலில் வெளிநாட்டவர்களிடம் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் எஸ்.குணசேகர தெரிவித்தார்.

இந்த இரு பெண்களும் ஆலயச் சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதாகவும் இவர்களின் கைப்பைகளில் இருந்து வெளிநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இந்த இரு பெண்களும் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எனினும் வெளிநாட்டுப் பணம் காணாமல் போனதாக எவரும் முறைப்பாடு செய்யாத நிலையில் இன்று பகல் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் உபபரிசோதகர் எஸ்.குணசேகர  கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X