2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபை காரியாலயம் மீதான தாக்குதலுக்கு த.தே.கூ கண்டனம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய காரியாலயத்தின் மீது ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கழிவு எண்ணெய்த் தாக்குதலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,

'போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் புதிய கலாசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களை அடிமைப்படுத்தும் நோக்குடன் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளவதன் மூலம் பிரதேச சபைகளின் செயற்பாடுகளை முடக்க அரசு முயற்சித்து வருகின்றது.

இன்று அதிகாலை ஆயுதத்துடன் வருகை தந்து கழிவு எண்ணெய் வீசும் அளவிற்கு இங்கு நிலைமை மாறியிருக்கின்றது. இது அரசாங்கத்தினாலும் அரசாங்க, ஆதரவு ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பது வெளிப்படையான உண்மை.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது நாட்டில் அமைதியும் சமாதானமும் எப்படி எற்படும்? மனித நேயம் மதிக்கப்படவில்லை என்பதற்கு இந்தச் சம்பவமும் நல்லதொரு உதாரணம்.

அத்துடன் சர்வதேசத்தின் உதவியில் தமிழ் மக்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் மீது அரசாங்கமே இவ்வாறு கழிவு எண்ணெயினை ஊற்றுவதானது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

தமிழ் மக்களுக்குரிய தீர்வை அபிவிருத்தியினால் மளுங்கடிக்கும் அரசாங்கத்தின் கனவு ஒரு போதும் பலிக்காது. தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்ற தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அரசாங்கம் புரிந்துகொண்டு தீர்வை வழங்க முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்குரிய தண்டனையை அரசாங்கம் சந்திக்க நேரிடும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X