2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் உற்சவத்தின் மூலம் யாழ் மாநகரசபைக்கு ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா வருமானம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

2012 ஆண்டு நல்லூர் உற்சவத்தின் மூலம் யாழ் மாநகர சபைக்கு ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லூர் ஆலயச் சூழலில் வர்த்த நிலையங்களை குத்தகைக்கு வழங்கியதன் மூலமும் ஏனைய விதத்திலும் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

கடந்த வருடம் 86 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்தது. 2009ஆம் ஆண்டு யாழ் மாநகர சபை பொறுப்பேற்றகப்பட்ட காலத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் நல்லூர் உற்சவத்தின் போதும் சிறந்த சேவையை மாநகரசபை வழங்கி வருகின்றது.

கடந்த வருடங்களை விட இம்முறை மாநகர சபையின் பணியாளர்கள் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டு மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றியுள்ளார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X