2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முகாமைத்துப பயிற்சி

Super User   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வட மாகாண கடற்தொழில் அமைச்சின் அனுசரணையுடன் கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவதற்கும், அபிவிருத்தி செய்வதற்குமாக கடற்n தாழிலாளர் கூட்டுறவு சங்க முகாமைத்துவ அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர் அருந்தவநாதன் தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில், கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாக கட்டமைப்பு, கூட்டங்கள், நடைமுறைகள்,
கடற்தொழில் நீரியல் வள கட்டளைச் சட்ட நடவடிக்கைகளும் ஒழுங்கு விதிகளும், சங்கங்களில் பேணப்படவேண்டிய ஆவணங்களும், கணக்கு வைப்பு முறைமைகள், கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு நன்கொடையாக கிடைக்கின்ற நிதி, சொத்துக்களை கணக்கிடும் முறை, கடற்தொழில் தொழிற்பாட்டுக்கான அனுமதிப்பத்திர முறையும், கடற் தொழிலாளர் நலத்திட்டங்களும், உப விதி திருத்தம் தொடர்பான நடைமுறைகள், சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் போன்ற தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவி பணிப்பாளர் கணேசமூர்த்தி, கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம்பிள்ளை மற்றும் செயலாளர், பொருளாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X