2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மர்மப்பொருள் வெடித்து இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ரஜனி)

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மணிப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரின் இடது கையின் மணிக்கட்டு சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முல்லைத்தீவு, செம்மணிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் செந்தூரன் (வயது 21) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தார்.
கடற்கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில்  வலையில் மர்மப்பொருள் ஒன்று அகப்பட்டதாகவும் இதனை கையில் எடுத்தபோது அது வெடித்ததாகவும் படுகாயமடைந்த இளைஞர் கூறினார்.

இந்த இளைஞர் உடனடியாக  முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிச்சை பெற்றுவருகின்றார்.

இது தொடர்பான விசாரணையை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X