2025 மே 21, புதன்கிழமை

யாழிற்கு கிரிக்கெட் வீரர்கள் வருகின்றனர்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மலிங்க, மத்தியூஸ், குலசேகர, சண்டிமல் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு நாளை  சனிக்கிழமை வருகை தரவுள்ளதாக யாழ். கிரிக்கெட் மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

முரளி வெற்றிக்கிண்ண 20 - 20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை முதல் 4 மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஒட்டுசுட்டான் ம.வி, மாங்குளம் ம.வி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலை மைதானங்களில் இந்தப் போட்டி  நடைபெறவுள்ளது.

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் இலங்கை அணி வீரர்களான லசித் மலிங்க,  மத்தியூஸ், குலசேகர, சண்டிமல்  ஆகியோரும்  ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கு குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X