2025 மே 21, புதன்கிழமை

யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற  யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. 

யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திட்டங்கள்,  ஏனைய வேலைத்திட்டங்கள், வாழ்வெழுச்சித் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவசாயம், கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் ஆகியவற்றுக்கான பயனாளிகள் தெரிவும் அவர்களுக்கான வாழ்வாதரா உதவிகளும் இதனால் பயனாளிளுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், மின்சாரம் கல்வி நடவடிக்கை, அபிவிருத்தி,  சுகாதாரம் ஆகியன தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

இதன்போது பல்வேறு கோரிக்கைளும் குறைகளும் முன்வைக்கப்பட்ட நிலையில், இவை தொடர்பில் சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

யாழ். பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். பிரதேச செயலாளர் தெய்வேந்திரன், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன், யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X