2025 மே 21, புதன்கிழமை

யாழில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் குறைவு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ்ப்பாணத்தில் கடந்த  வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யாழ். பிரதம பொது சுகாதாரப் பரிசோதகர் க.அ.ஜீவானந் தெரிவித்தார்.

யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுகாதாரப் பரிசோதகரால் 560 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். 2011ஆம் ஆண்டு 76 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த வருடம் 37 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தெரியவந்துள்ளது. இருப்பினும் தாம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின்போது 20  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும், ஏனையவர்கள் வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் யாழ். பிரதம பொது சுகாதாரப் பரிசோதகர் க.அ.ஜீவானந் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X