2025 மே 21, புதன்கிழமை

பனை சார் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை வழங்க தென்னாபிரிக்க முன்வந்துள்ளது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

பனை சார் உற்பத்தி பொருட்களுக்கு தென்னாபிரிக்காவில் சந்தை வாய்ப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தென்னாபிரிக்க குழுவினர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை சென்று பார்வையிட்டதுடன், தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் பனை சார் உற்பத்தி உணவுப் பொருட்கள் சித்த மருத்துவ குணாம்சம் கொண்டவை என தென்னாபிரிக்க குழுவினர் தெரிவித்ததுள்ளதுடன், யாழ். மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தகவல்களை திரட்டிச் சென்றுள்ளனர்.

அத்துடன், பனைசார் உற்பத்திகளை கொள்வனவு செய்வதுடன், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை ஏடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X