2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கோம்பயன்மணல் மயான புனரமைப்பு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள கோம்பயன்மணல் மயான புனரமைப்புப் பணிகள் கடந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று தெரிவித்தார்.

இம்மாயானப் புனரமைப்புப் பணிகள்  21 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இப்புனரமைப்புக்கு வடமாகாணசபை,  அபிவிருத்தி நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவையும் மாநகரசபை நிதியிலிருந்து 11 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்ததாகவும் அவர் கூறினார்.

இப்புனரமைப்பு பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகுமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X