2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லூர் பிரதேசசபை தவிசாளர்மீது ஆயுததாரிகள் தாக்குதல்; காணி விவகார ஆவணங்கள் பறிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி, கிரிசன்)

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டு அவரிடமிருந்த பொதுமக்களின் காணி விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து காயமடைந்த தவிசாளர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கொக்குவில், அம்பட்டைப்பாலம் பகுதியினூடாக தனது கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த தவிசாளரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ள ஆயுததாரிகள் இருவர், அவரை இடைமறிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் தவிசாளரின் வாய் மற்றும் கைகள் போன்றன காயங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதனையடுத்து, தவிசாளரிடமிருந்த பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்களை மேற்படி ஆயுததாரிகள் பறித்துச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X