2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள்  இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தவிசாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச சபை எதிர்கட்சி தலைவரும் அமைப்பாளருமான  ரவீந்திரதாசன் தெரிவிக்கையில்,

'பிரச்சினைகளை பேசித் தீர்மானிக்க வேண்டியதுதான் குறிக்கோள். ஜனநாயக நாட்டில் வன்முறை ஆயுதக் கலாச்சாரத்தினால் ஜனநாயகத்தினை யாராலும் முறியடிக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டதும் ஏனைய  உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். நாங்கள் தழிம் பேசும் சமூகங்கள். இவ்வாறான சம்வங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் தமது கண்டனத்தினையும் தெரிவிக்கின்றோம்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X