2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச. பருத்தித்துறைசாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.

யாழ்.பெற்றோலியம் கூட்டுத் தாபனத்தில்; எரிபொருட்களை கடனடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைகள் எடுக்கபட்டு, தமக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளமையை அடுத்தே தமது தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட்டதாக  இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை தொழிற்சங்கத்தினர் மேலும் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் உரிய காலத்தில் வழங்கப்படாமையினால் ஊழியர்கள் குழப்பமடைந்ததுடன், பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இவ்விடயம் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தவின்; அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்போது, அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய,  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடனடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான அனுமதி பெற்றுக் கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்;டதுடன், முன்பு வங்கயில் பெறப்பட்ட மேலதிக பற்றுக் கடன் தொகையான 5 லட்சம் ரூபாவினை இரு மடங்காக பெற்றுக் கொள்ளவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X