2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் நால்வர் படுகாயம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
நீர்வேலி கரந்தன் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கென்டர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்களில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கரவெட்டி நவக்கிரி பகுதியைச் சேர்ந்த கெங்காதரன் (வயது 45) அவரது மனைவி சனாதினி (வயது 42) மற்றும் மேற்படி இருவரின் பிள்ளைகளான சங்கவி (வயது 10), கவிதரன் (வயது 7) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X