2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்டுகளின்  பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேராவின் பணிப்புரைக்கு அமைய யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, 1000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் 50 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி மற்றும், யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும், யாழ்.சார்ஜன்ட்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X