2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வடமாகாண ஆளுநரின் செயலாளர் பதவி நீக்கம்?

A.P.Mathan   / 2013 ஜனவரி 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, எம்எம்)

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சுமித் ஜெயக்கொடிமீது பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்நிலையிலேயே அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்வதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் இச்செய்தியை ஆளுநர் தரப்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும் நாளைய தினம் இச்செய்தி தொடர்பில் முழுமையான விபரத்தினை அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:
வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு: டி.ஜ.ஜி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X