2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

இருநாட்டு மீனவ சமாசங்களும் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும்: எம்.மகாலிங்கம்

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

'இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்' என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மீனவர் பிரச்சனை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்திய மீனவர்களை இங்கு வந்து மீன் பிடியுங்கள் எல்லை தாண்டிவாருங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் வந்து தொழில் செய்கின்றனர்.

இந்தப்பிரச்சனை விரைவில் தீர்கப்படவேண்டிய பிரச்சனை. தத்தமது மீனவர் சங்கங்கத்துடன் தொடர்பு கொண்டு ஒன்றாக கூடி இருதரப்பினரும் முடிவுகள் எடுக்கவேண்டும்.

இதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாரக இருக்கின்றது. இதற்கொரு முடிவு காணப்படவேண்டும் என்பதில் நாங்கள் விருப்பத்தோடு இருக்கின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X