2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், கிரிசன்

வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் அலுவலர்களையும் கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வில் இன்று புதன்கிழமை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

வாழ்வெழுச்சித்திட்டத்தின் பயன்பாடு, அதனால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பில் இந்த செயலமர்வில் திணைக்களத் தலைவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் திணைக்களத்தலைவர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, உடுவில் பிரதேச செயலக வாழ்வெழுச்சி திட்ட விழிப்புணர்வு செயல் திட்ட  கருத்தரங்கு இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற குழுக்களின்  பிரதித் தலைவரும உடுவில் பிரதேச செயலக ஒருங்கனைப்பு குழு தலைவருமான மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X