2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கடனை மீளச் செலுத்தும் காலத்தை நீடிக்க கோரிக்கை

Super User   / 2013 மார்ச் 05 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளின் கடனை மீளச் செலுத்தும் காலத்தை இரண்டு வருடத்திற்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை ஒன்றைச் சமர்பிக்க யாழ் மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளது.

யாழ். மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமையாகம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ். மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் பெருமளவான விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரச மற்றும் தனியார் வங்கிகளில் விவசாய கடன்பெற்று விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டவர்கள் இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக அதனை மீளச் செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் இந்த பிரச்சனையை ஏற்றுக்கொண்டு இது தொடார்பில் விவசாயக் கடனை மீளச் செலுத்தும் கால எல்லையை இரண்டு வருடங்களுக்கு நீடிக்குமாறு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுக்க யாழ் .மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் இந்த கூட்டத்தில் சாவகச்சேரி, சண்டிலிப்பாய், தொல்புரம், கைதடி போன்ற இடங்களில் நெல்கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கிலோ சம்மா 35 ரூபாவிற்கும், கிலோ நாட்டரிசி 32 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில்  விவசாயத் திணைக்கள பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையளர், பிரதேச செயலாளர்கள்  என பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X