2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குற்றங்களை மறைக்க யாழில் ஆர்ப்பாட்டம்: சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'இனப்படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது' என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொறுப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

'இலங்கை அரசு தனது குற்றங்களை அறிந்து திருந்தப்போவதுமில்லை. சர்வதேசம் இலங்கையை திருத்தப்போவதுமில்லை. இராணுவமும், அரசு ஆதரவு கட்சிகளும் இலங்கை அரசை திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, இன்றும் இனப்படுகொலைகளை செய்வதற்காகவே தூண்டுகின்றன' என்றும் சிவாஜிலிங்கள் குறிப்பிட்டார்.

தமிழர்கள் தமது தலை விதியை தாங்களே தீர்மானத்தித்துக்கொள்ள வேண்டுமென்றும், அத்தீர்மானத்தினை நோக்கி நகர்வதை தவிர தமிழர்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அவ்வாறான வழி தமிழர்களுக்கு இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X