2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சிறிதரன் எம்.பி. - இராஜாங்க திணைக்கள அதிகாரி சந்திப்பு

Super User   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உத்தியோகஸ்தர் லெஸ்லீபி ரெயிலலே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்திற்கு சென்று நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு நில அபகரிப்பு, ஷ இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை, நாடாளுமன்ற உறுப்பினரின் கிளிநொச்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை மற்றும் தாக்குதல்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X