2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'வடக்கு தேர்தலில் பொருத்தமானவர் தெரிவானால் வலி வடக்கில் மீள்குடியேற்றம் நிச்சயம்'

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாணசபைத் தேர்தலில் பொருத்தமானவர்களை தெரிவு செய்தால், ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன், வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
'வடக்கு மக்கள் சில சந்தர்ப்பங்களில் சரியானவற்றை தெரிவு செய்யாது, பிழையானவற்றை தெரிவு செய்வதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள்.

அந்தவகையில், மாகாண சபை தேர்தலில் வெற்றி கொண்டால் 3 அல்லது 5 வருடங்களில் யாழ். மாவட்டம் வளம் கொழிந்த பிரதேசமாக மாற்றுவோம் என்றும், இது நியாயமானதும், யதார்த்தமானதுமான கனவுகள்' என்றும் உயர்மட்டங்கள் கூறின.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X