2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'கைது செய்வோம்' என்று சுரேஸ் எம்.பி.யை எச்சரித்த பொலிஸார்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


'ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றால் கைது செய்வோம்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போதே பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆர்பாட்டத்த்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் திரண்டு வீதிக்கு குறுக்காக வந்து காங்கேசன்துறை வீதியூடாக நடந்து சென்றனர். அங்கு வந்த பொலிஸார் இவ்வாறு நடந்து சென்றால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள சுரேஸ் எம்.பி, 'எம்மைக் கைது செய்ய முடியுமானால் கைது செய்யுங்கள்' என்று பதிலளித்தார். தொடர்ந்து வீதியில் மக்கள் ஒன்றுகூடி அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

  Comments - 0

  • vallarasu Monday, 29 April 2013 04:34 PM

    இதில் இருந்து விளங்கி விட்டது வடக்கில் த தே கூ தேர்தலில் வெல்லப்போவது நிச்சயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X