2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் அடம்பன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அடம்பன் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிராம் 680 மில்லி  நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதோடு சந்தேக நபரையும் கைது செய்து விடத்தல் தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விடத்தல் தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X