2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முச்சக்கர வண்டியில் ஆடு திருட்டு

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

முச்சக்கர வண்டியில் ஆட்டை திருடிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சுன்னாகம் கிழக்கில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது..

சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியோரத்தில் உள்ள புற்களை மேய்வதற்காக ஆட்டைக் கட்டிவிட்டு உரிமையாளர் வீட்டினுள் சென்றுள்ளார்.

இந்தவேளையில், முச்சக்கர வண்டியில் வந்த இருவர் வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.

ஆட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்துபோது ஆடு திருடப்பட்டதைக் கண்டு அதிர்சியுற்றதுடன் அது தொடர்பில் சுன்னாகம்  பொலிஸில் முறையிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X