2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான்  யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை  ஆளுநர் செயலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது வட மாகாணத்தில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதன்போது யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான  பங்களாதேஷ் உயர் ஸ்தானிகருக்கு வடமாகாண ஆளுநர் விளக்கிக் கூறியுள்ளார்.

இதேவேளை, வேறு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி டக்ளஸ் தேவானந்தாவையும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X