2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நல்லூரில் மரக்கிளை முறிந்தது; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நல்லூரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஐங்கரன் (வயது 39) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தது.  இந்த நிலையில், ஹெலிகொப்டர் விசிறியின் காற்று வேகத்தில்  நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வீதியிலிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து இவர்  மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X