2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடம் திறப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடம் நேற்று  புதன்கிழமை (16)  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இராசாவின் தோட்ட வீதியில் அமைக்கப்பட்ட இந்த கேட்போர் கூடத்தை மூத்த ஊடகவியலாளர்கள் எஸ்.இராதையன் மற்றும் ஐ.சச்சிதானந்தம் இணைந்து திறந்துவைத்தனர்.

இந்தத் திறப்பு விழாவினைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிற்கான நேர்காணல் தொடர்பான விசேட செயலமர்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்துகொண்டார். மேலும்  ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .