2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வறியவர்களுக்கான கொடுப்பனவில் புதியவர்கள் இணைப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா   

சமூக சேவைகள் நலத்துறை அமைச்சினால் யாழில் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவிற்கு புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு பொதுசன மாதாந்த உதவிப்பணம், சமுர்த்தி நிவாரணம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இத்திட்டத்தில் 70 வயதைப் பூர்த்தியடைந்த வயோதிபர்களை இணைத்துக்கொள்ளப்படாத நிலைமை காணப்படுகின்றது.

சமூக சேவைகள் திணைக்களம் தற்போது புதிய திட்டத்தின் கீழ் இவ்வாண்டு யூன் மாதத்துடன் 70 வயதைப் பூர்த்தியடைந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட அனைவரையும் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்படி கொடுப்பனவுக்கு யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட கிராம சேவகர்கள் மூலம் தகுதியானவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .