2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தாதியர் சேவை விசேட தர நியமனத்தில் வட, கிழக்கிலுள்ளோர் புறக்கணிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வடக்கு, கிழக்கு தாதியர் சேவையில் கடமை புரிந்து வரும் தாதி உத்தியோகஸ்தர்கள் தாம் இதுவரையில் விசேட தர நியமனத்தில் புறந்தள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிரேஸ்ட தாதி உத்தியோகஸ்தர்களாக கடமை புரிந்து வரும் தம்மை இதுவரையில் விசேட தர தாதியர் நியமனத்தில் உள்வாங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட சிரேஸ்ட தாதி உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மீள் குடியேற்றப் பிரதியமைச்சருக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் மகஜர் ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிரேஸ்ட தாதி உத்தியோகஸ்தர் க.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தாதியர் சேவை விசேடதர நியமனத்திற்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுகாதார அமைச்சினால் பயிற்றப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தாதியர்களை உள்ளடக்காது சிங்கள மொழி மூலம் கொழும்பில் பயிற்றப்பட்ட தாதியர்களுக்கு மாத்திரம் நேர்முகப் பரீட்சை நடாத்தி அவர்களுக்கு மாத்திரம் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இவ்விடம் பற்றி சுகாதார அமைச்சில் கதைத்தபோது பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக் காத்திருப்பதாக எமக்குக் கூறப்பட்டது. ஆனால் கடந்த 2013.08.19இல் பொதுச் சேவை ஆணைக் குழுவினால் அதற்குரிய கடிதம் அனுப்பப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுச் சேவை ஆணைக்குழுவினால் சுகாதார அமைச்சிக்கு 2013.08.19 இல் அனுப்பப்பட்ட அந்தக் கடித்ததின் கோவை இலக்கம் டி.எம்.எஸ்.29649  (னு.ஆ.ளு.29649) ஆகும்.

எனவே வடக்கு கிழக்கில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கில் பயிற்றப்பட்ட தமிழ் தாதியர்களையும் இந்நியமனதில் சேர்துக் கொள்ள ஆவன செய்வதன் மூலம் பாரபட்சம் பறக்கணிப்பு இடம் பெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதிகள் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், அகியோருக்கும் அனுப்பியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிரேஸ்ட தாதி உத்தியோகஸ்தர் க.சிவப்பிரகாசம் பாதிக்கப் பட்டவர்கள் சார்பாக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .