2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொழும்புத்துறை கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை மீன் பிடிக்கச் சென்றவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை நான்காம் குறுக்கு தெருவைச் சேர்ந்த  ந.சிவலிங்கம் (வயது 46) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மேற்படி பகுதியில் நேற்று மாலை ஒரு படகில் நான்கு பேர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக படகு கவிழ்ந்ததினையடுத்து நான்கு பேரும் கடலில் தத்தளித்துள்ளனர்.  இதில் மூன்று பேர் கரையொதுங்கியதையடுத்து மற்றொருவரை காணவில்லையென யாழ். கடற்தொழில் சம்மேளனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

கடற்தொழிலாளர் சம்மேளனம் மேற்படி நபர் காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, 5 படகுகளில் 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (04) காலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு காலை 9 மணியளவில் அவரை சடலமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ். பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கான சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .