2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்


யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் 231 பேர் வடமாகாண சபைக் கட்டிடத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை  நடைபெற்று வருகின்றது. இந்த  நிலையிலேயே இந்த ஆர்பாட்டமும் இடம்பெற்று வருகின்றது.

தங்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்குமாறு  கோரியே யாழ். மாவட்டத் தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமர்வின் இடைவேளையில் வடமாகாண சபை கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .